மீண்டும் கட்சி தாவல் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, மௌபிம ஜனதாக் கட்சியுடன் இணைந்துள்ளார்.

இவ்வாறு கட்சி மாறிய அவருக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக் கடிதத்தை மௌபிம ஜனதாக் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இன்று வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி தேர்தலில் திலும் அமுனுகம, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க.

Related Articles

Latest Articles