ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி அரசுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படும் அமைச்சர்கள் குழு, மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினரே, இது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றுவருகின்றனர்.
இப்பேச்சின் அடிப்படையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இது குறித்து சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவிடம் கேட்டபோது, இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அது நடக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
