களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் காலமானார். வயது – 74.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அவரது அமைச்சரவையில் இவர் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அறகலயவின்போது போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கும் இலக்காகி இருந்தார்.










