முழு அரச மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்!

முழு அரச மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி இன்று தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

மன்மோகன் சிங்கின் உடல் இன்று காலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்களின் இறுதி மரியாதையை அடுத்து மன்மோகன் சிங்கின் உடலம் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு, உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சந்தனக் கட்டைகள் மீது மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டு, சீக்கிய மத முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பகல் ஒரு மணி அளவில் 21 குண்டுகள் முழுங்க முழு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Articles

Latest Articles