அரச பங்காளிக்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான விதுர விக்ரமரத்ன, பிரேம்நாத் தொலவத்த ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதேவேளை, ஒழுக்காற்று விசாரணையை எதிர்கொள்ள தயார் என்று பிரேம்நாத் தொலவத்த அறிவித்துள்ளார்.
அழைப்பையேற்றே தான் கூட்டத்துக்கு சென்றதாகவும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறினார்.
