ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், இராஜாங்க அமைச்சர் ஒருவரும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயெ இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியில் வசந்த யாப்பா பண்டார பங்கேற்றிருந்தார். இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோரும் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
இதன்காரணமாகவே மேற்படி மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளனர்.
