மொட்டு அணி முரண்பட்டால் நாடாளுமன்றம் கலைப்பு! ஜனாதிபதி ஆராய்வு!!

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டால், இந்த நடவடிக்கையில் ஜனாதிபதி இறங்குவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தை மொட்டு கட்சியின் மாவட்ட தலைவர்கள் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஆளுங்கட்சியின் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டோரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles