” கொலைக்கலாச்சாரம் என்பது ராஜபக்ச குடும்பத்துக்கு புதிய விடயமல்ல. பஸில் ராஜபக்சவின் மொட்டு கட்சி மாநாட்டு உரை இதனையே வெளிப்படுத்துகின்றது.” – என்று மிகிந்தலை விகாரையின் விகாராதிபதியான வலவாஹேனுனவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.
அத்துடன், மொட்டு கட்சியின் சம்மேளன கூட்டத்தில் பங்கேற்றவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எம்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது பற்றி அவர் (பஸில் ராஜபக்ச) எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது கொலை செய்யப்படுவீர்கள் என்பதே அந்த எச்சரிக்கையாகும். அவர்கள் (ராஜபக்சக்கள்) சாட்சி இல்லாமல் கொலை செய்தனர். இது எமக்கு தெரியும். எவராவது ஒருவர் தலைதூக்கினால் அவரை கொலை செய்தனர். கொலைக்கலாசாரத்தை அவர்கள் முன்னெடுத்தனர். இந்த கலாசாரத்தை அவர்களுக்கு மீண்டும் வழங்குவதா?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டுக்கு சென்றவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்கள் திண்டாடும் நிலையில், மனசாட்சி உள்ள எவரும் மாநாட்டுக்கு சென்றிருக்கமாட்டார்கள். எனவே, அவர்களின் மனநிலை புரிகின்றது. எனவே, மொட்டு கட்சி மாநாட்டில் பங்கேற்றவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தவும். இது தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.
