யானை – மனித மோதல்களைக் குறைக்க ட்ரோன் விமானங்கள் களமிறக்கம்!

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரோன் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டங்கள் அனுராதபுரம், புத்தளம், அம்பாறை மற்றும் யானை – மனித மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வன வளத்தைப் பாதுகாப்பதே வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாகும். நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர், திணைக்களத்தின் செயற்பாடுகள் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய வனப் பகுதிகளை அண்மித்து வாழும் மக்களின் பாதுகாப்பிற்கான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

வன வளம் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுப்பதாக அமையும் பட்சத்தில் மக்கள் வனத்தை பாதுகாப்பர். வனப் பகுதிகளின் எல்லையில் வாழும் மக்கள், வனத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய மூலப்பொருட்கள் பல உள்ளன. வனப்பகுதிகளை அண்மித்து வாழ்வோருக்கு மேற்படி மூலப்பொருட்களைத் தேடுவதற்கான அனுமதியை வழங்கும் பட்சத்தில் அவர்களால் வனங்களும் பாதுகாக்கப்படும். பசுமை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் வலுப்படும். சுற்றுச்சூழலிருக்கும் மூலப்பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் பெருளவான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியும்.

அதனால் மாற்றுச் சிந்தனைகளுடன் செயற்பட எதிர்பார்க்கிறோம். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 29% ஆக காணப்படும் வனங்களைக் கொண்டு முழுமையாக பயனடைவதற்கும், பாதிக்கப்பட்ட வனங்களின் பாதுகாப்புக்காக புதிய மரங்களை நடுகைச் செய்யவும் நடவடிக்கை எடுப்போம். நாட்டிலுள்ள வன வளத்தை மேம்படுத்தும் வகையில் அதற்கு அவசியமான மரக் கன்றுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

வீதிகளின் இரு மறுங்கிளும் மரங்களை நடுவதற்கு அவசியமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரத்துக்கு அவசியமான மரக் கன்றுகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எமது அமைச்சு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 135% இலாபத்தை ஈட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில்
1670 மில்லியன் வருமானம் இட்டியிருந்த நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 4700 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.

யானை – மனித மோதல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த சிறிய நாட்டிள் மக்கள் தொகையை போன்றே யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு நீர்பாசான வேலைத்திட்டங்கள் யானைகளின்பாதைகளுக்கு இடையூறாக அமைந்துள்ளன. மக்களின் விவசாயச் செயற்பாடுகளும் யானைகளின் பாதைகளை பாதிக்கின்றன. மக்கள் வாழும் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவைத் தடுப்பதற்கு அடுத்த வருடத்தில் ஆயிரம் கிலோ மீற்றர் யானை தடுப்பு வேலிகளை அமைக்க எதிர்பார்க்கிறோம்.

பல்துறை அபிவிருத்தி திணைக்களத்திலுள்ள 4000 பேரை நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொணடு யானை வேலிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்த திட்டம் சாத்தியப்படும் பட்சத்தில் யானை மனித மோதலுக்கு குறிப்பிடத்தக்க தீர்வைக் காண முடியும் என எதிர்பார்க்கிறோம்.

யானைகளின் பாதுகாப்புக்காக இதுபோன்ற பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதேபோல் யானைகளின் வீதிகளில் காணப்படும் மக்களின் குடியிருப்புக்களுக்கு மாறான மாற்று இடங்களை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் டிரோன் விமானங்கள் போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டங்கள் அனுராதபுரம், புத்தளம், அம்பாறை மற்றும் யானை – மனித மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles