2025 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நலன்கருதி பொதுவேட்பாளராக களமிறங்குவார் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்சே பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிவடையும்வரை அதனை கலைக்கமாட்டேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். 2030 வரை ஜனாதிபதியாக அவரே பதவி வகிப்பார்.
2025 ஜனாதிபதி தேர்தலில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் களமிறங்குவார். நாட்டின் தேவை கருதி பொதுவேட்பாளராக வரலாம். அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள்.” – என்றார்.
