கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதியான பொத்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மீரிகம-விஜயரஜதஹன ரயில் கடவையில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
