” இலங்கையில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டமாகும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது நாட்டு பொருளாதாரத்தை நாமசமாக்கிய ராஜபக்சக்களை மக்கள் விரட்டினார்கள். ஆனால் அவர்களை காப்பாற்ற பரமாத்மாபோல் ரணில் விக்கிரமசிங்க வந்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி காலத்தில் நல்லவராக இருந்தார். இந்த
ஆட்சியில் அவர் மோசமானவராக உருவெடுத்து இருக்கிறார்.
நாட்டில் யுத்தம் இடம்பெற்றபோது, தமிழர்களை அடக்குவதற்கு
கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம்தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் . அந்த
காலத்தில் சிங்களவர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது . இன்று அந்த
சட்டம் மாறுபட்டு உள்ளது. இந்த பயங்கரவாத சட்டத்தின் ஊடாக ஒரு நபர் கைது
செய்யப்பட்டால் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த பயங்கரவாத தடைசட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக
எதிர்க்கிறது. ” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்










