ருவான் – அண்ணாமலை இடையே சந்திப்பு

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.கே.அண்ணாமலை மற்றும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் திரு.ருவான் விஜயவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று காலை (11) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த பாடுபடும் என திரு.கே.அண்ணாமலை இங்கு குறிப்பிட்டார்.

திரு அண்ணாமலை இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.

Related Articles

Latest Articles