ரூ. 120 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ள திலினி – இதுவரை 12 முறைப்பாடுகள்!

பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, அவர் 128 கோடி ரூபாவிற்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த தகவலை வெளியிட்டார்.

திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

திலியின் வலையில் அரசியல் வாதிகள், கலைஞர்கள், வியாபாரிகள் என பலரும் சிக்கியுள்ளனர். கோடிகளை இழந்தும் உள்ளனர்.

Related Articles

Latest Articles