மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்ட பகுதிகளில் இன்று காலையும் போராட்டங்கள் இடம்பெற்றன.
இதன்படி வட்டகொடை, தெற்கு மடக்கும்புர தோட்ட தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஆயிரத்து 700 ரூபாகூட போதாது, எனவே, குறைந்தபட்சமாக கோரப்பட்டுள்ள அந்த தொகையையாவது வழங்குவதற்கு கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
