” சிறையில் அடைத்து எங்களை கொலை செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. பல இடங்களுக்கு அழைத்தும் சென்றனர். இவை தொடர்பான அனைத்து விடயங்களையும் இன்று அம்பலப்படுத்துவோம்.” – என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகே தெரிவித்தார்.
வசந்த முலிகேவிற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட 03 வழக்குகளிலும் அவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வெளியிடுகையலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
” நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மக்கள்மீது வரிகள் சுமத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த அரசின் முன் மண்டியிட நாம் தயாரில்லை. இது ஆரம்பம் மட்டுமே. மக்கள் சக்தி என்னவென்பதை விரைவில் காட்டுவோம்.
எம்மை சிறையில் அடைத்து கொலை செய்வதற்கு அரசு முயற்சித்தது. அதற்காக வகுக்கப்பட்ட திட்டங்களை நாளை (இன்று ) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பெயர், விபரங்களுடன் அம்பலப்படுத்துவோம்.
எனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றிகள்.” – என்றார்.










