வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் முதன்மை நோக்கமாக அமைந்திருந்தது.
இச்சந்திப்பின்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் விரிவாகக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அப்பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும், அம்மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க, எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் நேரடியாகத் தலையீடு செய்து செயலாற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் சுட்டிக்காட்டினார்.










