‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது’ – திகாவுக்கு எதிராக திலகர் அணியின் முதல் அடி!

” நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்புக்காக முன்னாள் அமைச்சர் திகாம்பரம் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தாரா? என்ற விடயத்தை கண்டறிவதற்காக, தகவல் அறியும் உரிமையை பயன்படுத்துவதற்கு மலையக அரசியல் அரங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார் கூறியவை வருமாறு,

” நுவரெலிய மாவட்டத்திற்கென புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படுவதற்கான அரச வர்த்தமானி 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆந் திகதி வெளியிடப்பட்டிருந்தது. தற்போது இந்த வர்த்தமானி காலி மாவட்டத்திற்கும் நுவரெலிய மாவட்டத்திற்கும் பாகுபாடான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டு அதற்கு எதிராக கையெழுத்து இயக்கமும் முன்னெடுக்கப்படுகின்து.

மேற்படி வர்த்தமானியானது அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த காலி மாவட்ட எம்பி வஜிர அபேவர்தன அவர்கள் சமர்ப்பித்த அமைச்சரைவப் பத்திர தீர்மானத்துக்கு அமைவாக பிரகடனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு, அப்போது மலைநாட்டு புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சராக இருந்த பழனி திகாம்பரம், நுவரெலிய மாவட்ட பிரதேச செயலகங்களை அதிகரிப்பதற்கு ஓர் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்ததாகவும் அதனடிப்படையில் ஓர் வர்த்தமானி வெளியானதாகவும் கடந்த 16/01/2022 ஞாயிறு ( வீரகேசரி) பத்திரிகையில் கட்டுரை ஒன்று ( பானா. தங்கம் என்பவரால்) எழுதப்பட்டுள்ளது .


இத்தகைய ஓர் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று குறித்தோ அல்லது வர்த்தமானி குறித்தோ ஆதாரபூர்வமான சான்றுகள் இருந்தால் அதனையும் வெளியிடுமாறு குறித்த பத்தரிகை நிறுவனத்தைக் கோருவதுடன், இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக ;

1. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சுக்கு பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் அமைச்சரவைப் பத்தரித்தையோ அல்லது வர்த்தமானி அறிவித்தலையோ வெளியிடும் அதிகாரம் உள்ளதாவென்றும்,

2. அப்படியாயின் 2015 -2019 காலப்பகுதியில் குறித்த அமைச்சின் அமைச்சராக செயற்பட்ட பழனி திகாம்பரம் 2019 சமர்ப்பித்த நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்புக் கோரிய அமைச்சரவைப் பத்திரத்தையும், அதனடிப்படையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலையும்

பொதுமக்களுக்கு வெளிப்படுத்தக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ( RTI) நாடவுள்ளதாக, மலையக அரசியல் அரங்கத்தின் ( MPA) செயலாளர் நா. கிருஷ்ணகுமார் அறிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles