வவுனியா வயோதிபர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு

வீதியோரத்திலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு – மூன்று முறிப்புப் பகுதியிலுள்ள வயல்வெளி வீதியோரத்தில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா – முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்றவர்களால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நட்டாங்கண்டல் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles