வவுனியாவில் வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு மீட்பு!

வவுனியா, மாமடுப் பகுதியில் வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

மாமடு, மலையார்பருத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் காணியைத் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மாமடு பொலிஸில் காணி உரிமையாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்துப் பொலிஸாரால் கைக்குண்டு அகற்றப்பட்டு அதைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை மாமடுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles