வாக்காளராக பதிவு செய்ய இனி வீட்டு உரிமையாளரது அனுமதி தேவையில்லை

வாக்காளராக பதிவுசெய்துகொள்வதற்கு வீட்டு உரிமை தேவையில்லை. இந்த காரணங்களால் இதுவரை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முடியாமல் போனவர்கள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் தங்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ளலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல்கள்ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2021 ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு சாதாரண பதிவு முகவரியில் வாக்கு உரிமையாளராக பதிவு செய்துகொள்வதற்காக தகுதியுடைய அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை இருக்கின்றது.

வாக்காளராக பதிவு செய்துகொள்வதற்காக 2021 ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு சாதாரண பதிவு மாத்திரம் போதுமானது. சொத்துரிமை தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது.

வாடகை அல்லது குத்தகை வீடுகள் மற்றும் சட்டவிரோத பதிவாளர்கள் ஏனைய தகுதிகளை பூரணப்படுத்தி இருந்தால், அவர் சாதாரண முகவரியில் வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். அதற்காக வீட்டு உரிமையாளர்களின் விருப்பம் அல்லது இணக்கம் தேவையில்லை.

பிரஜை ஒருவருக்கு விட்டுக்கொடுக்க முடியாத இறையாண்மை அதிகாரத்துக்கு வாக்களிக்கும் அதிகாரமும் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. வாக்களிக்கும் அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு வாக்குரிமை பெயர் பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டிருக்கவேண்டும்.

வாக்காளராக பதிவு செய்துகொள்வதற்காக பிரஜைகளுக்கு தடைகளை ஏற்படுத்துவது நீதிமன்றத்தினால் தண்டம் அல்லது சிறைப்படுத்தல் அல்லது இந்த இரண்டுக்கும் கீழ்படியவேண்டிய குற்றமாகும்.

வாடகை அல்லது குத்தகை வீடுகள் மற்றும் சட்டவிரோத பதிவாளர்கள் வாக்காளராக பதிவுசெய்துகொள்வது, பிரஜைகளின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமாகும் என அறிவிப்பதுடன் இவ்வாறு பதிவு செய்வது சொத்து உரிமை அல்லது நிரந்தர பதிவை உறுதிப்படுத்துவதற்கு அல்ல என்பதை கருத்திற்கொள்ளவேண்டும்.

இவ்வாறான பிரச்சினை காரணமாக வாக்காளாராக பதிவுசெய்துகொள்வதற்கு முடியாமல்போனவர்கள் யாராவது இருந்தால், 2021,11,17ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் உங்களது கோரிக்கையை சர்ப்பிக்க முடியும். உங்களுக்கு தேவையான உரிமை கோரல் பத்திரங்கள் அனைத்து கிராம சேவகர் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம் மாகாண காரியாலயங்கள் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோன்று www.elections.gov.lk என்ற எமது இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். இதுதொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் 011 2860031 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles