விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி – திருமலையில் சோகம்!

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் சைக்கிளுடன், இ.போ.ச. பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்த நபர் பலியாகியுள்ளார்.

இவ்விபத்து இன்று (10) காலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த பஸ், மஞ்சள் கோட்டை கடக்க முற்பட்ட
சைக்கிளுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்தில் திருகோணமலை சர்தாபுரம்- ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஏ.வசந்த (36வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக் குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles