விமல், வாசு, கம்மன்பில சஜித்துடன் சங்கமிப்பார்களா?

” நாங்கள் எதிரணியில் இணையமாட்டோம். எமது வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் நீதி கிடைக்கவேண்டும். அதுவரை நானும் எனது அமைச்சு பணிகளை முன்னெடுக்கபோவதில்லை. ஜனாதிபதியால் எடுக்கப்பட்டுள்ள முடிவு தவறு. அவர் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். எனது சகாக்கள் இருவரும் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமைக்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles