வீரகெட்டியவில் துப்பாக்கிச் சூடு!

ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய, ஹகுருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உயிரிழந்தவரின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles