வெடுக்குநாறிமலை விவகாரம்: ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ்க் கட்சிகள் தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாகச் சந்தித்து, வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 தமிழர்களையும் உடனடியாகப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடித் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடந்தது.

விக்னேஸ்வரன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழர்களும் பிணை யில் செல்ல முடியாதவாறு, தொல்லியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் செவ் வாய்க்கிழமையாகும்.

அதற்கு முன் னதாக ஜனாதிபதி ரணிலைச் சந்தித்து, கைதான தமிழர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் மீதான குற்றப் பத்திரத்தில் மாற்றம் செய்து, உடனடியாகப் பிணை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்ய வலியுறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த கட்டமாக வெடுக்கு நாறிமலை விவகாரத்தில் நிரந்தரமான தீர்வைக் காண, ஜனாதிபதியுடன் அடுத்த கட்டமாக பேசவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles