வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

” வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறிமலை பிரச்சினை தொடர்பில் தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். ” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சரவையில் கருத்துகளை முன்வைத்தனர். தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தப்படும் என ஜனாதிபதி கூறினார். இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கும் உள்ளது என்ற விடயமும் குறிப்பிடப்பட்டது.” – என்றார்.

Related Articles

Latest Articles