வெளிநாட்டு துப்பாக்கியுடன் கலஹா பொலிஸ் பிரிவில் மூவர் கைது!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ – நுவரெலியா பிரதான வீதியில் ஆயர்வேத எனும் பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமின் பொறுப்பதிகாரி பி.எம்.என்.கே உடஅரம்ப தேவ, முகாமின் கட்டளை அதிகாரி டி.பி.ஆர்.பீ. ஸ்ரீவர்தன ஆகியோரின் வழிகாட்டலுடன் யுக்திய திட்டத்தின்கீழ் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டது.

32, 48 மற்றும் 50 வயதுகளுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், விசாரணைகளுக்காக அவர்கள் கலஹா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related Articles

Latest Articles