அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுள்ள ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடியபோதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருவரும் கட்சி உறுப்புரிமையில் இருந்து ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் தற்போதுதான் கட்சியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.










