அசாத் சாலியின் மனு தொடர்பில் மார்ச் 23 இல் நீதிமன்றம் தீர்மானம்

தனக்கு எதிராக சாட்சியமளித்தவர்களிடம் நட்டஈடு கோரி மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) தெரிவித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளித்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமால் பியதிஸ்ஸ மற்றும் காமினி வலேபொட ஆகியோரிடம் நட்டஈடு கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, இன, மத சீர்குலைவை ஏற்படுத்தும், வன்மத்தை தூண்டும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டதாகக் கூறி, பயங்கரவாத தடுப்புச் சடத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சாட்சிய விசாரணைகளின் அடிப்படையில் அசாத் சாலியை குற்றமற்றவராகக் கருதி கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles