அநுர அரசின் பாதீடு குறித்து ஆஸ்திரேலிய தூதுவருக்கு சஜித் விளக்கமளிப்பு!

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் பேச்சு நடத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் பிரதி தூதுவர் லலிதா கபூரும் பங்கேற்றிருந்தார்.

இலங்கையின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்தும், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஆஸ்திரேலிய தூதுவருக்கு இச்சந்திப்பின்போது தெளிவுபடுத்தினார்.

வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கையை மீட்டெடுக்கத் தேவையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ஆஸ்திரேலிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles