ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்சவினால் நாளை (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையில் 21.11.2020 முதல் 21.09.2021 வரை பாராளுமன்றத்தில் நடைபெற்ற 30 அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச்.டி.ஈ.ஜனகாந்த சில்வா இந்த அறிக்கையைப் பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான அஜித் ராஜபக்சவிடம் இன்று (08) கையளித்தார்.
