நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி முத்தேர்த் பவனி இன்று (01.05.2026) பக்திபூர்வமாக நடைபெற்றது.
இன்று காலை திருவிளக்கு பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட முத்தேர் பவனி ஆரம்பமானது. இதில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகியோர் தேரில் அமர்த்தப்பட்டு வீதி உலா சென்றனர்.
இந்த முத்தேர் பவனியானது கோவில் வீதி, உடபுஸ்ஸல்லாவ வீதி, பொருளாதார மத்திய நிலையம், தர்மபால சுற்றுவட்டம், பிரதான தபால் நிலையம், புதிய கடை வீதி, கண்டி வீதி மற்றும் பழைய கடை வீதி வழியாகச் சென்று, மீண்டும் கண்டி வீதி, உடபுஸ்ஸல்லாவ வீதி ஊடாக வைத்தியசாலை வீதி மற்றும் நவகம் பொட கிராம வீதி வழியாக ஆலயத்தை வந்தடையவுள்ளது.
திருவிழாவின் தொடர்ச்சியாக நாளை (02.05.2026) சுவாமிகளுக்கு பச்சை சார்த்தும் நிகழ்வும், தீ மிதிப்பு வைபவமும் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகளுடன் முத்தேர் திருவிழா நிறைவுபெறும்.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவர் பூஜையுடன் விழா இனிதே நிறைவடையும்.
இந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நுவரெலியா ஹாவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மற்றும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய பரிபாலன சபையினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு


