“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இனிவரும் காலம் பொற்கலமாக அமையும்.” என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
15.05.2025.வியாழக்கிழமை அன்று கஹவத்தை பொரோனுவ நூறு ஏக்கர் பிரிவு தோட்டபகுதியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ எமது அரசாங்கத்தின் ஊடாக மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு மாத்திரமல்ல நாடலாவிய ரீதியில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் முதற்கட்டமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் 5700தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கவிருக்கின்றோம் .
எமது அரசாங்கம் பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டு மலையக மக்களுக்கு பத்து பேர்ச் கானியினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
எமது அரசாங்கத்தின் ஊடாக மலையக தமிழ் மக்களுக்கு எவ்வளவு அபிவிருத்தி திட்டங்களை இயலும் வரை முன்னெடுப்போம் இன்று சிலர் எமது அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்கள் எம்மை விமர்சிப்பவர்களுக்கு ஒன்றை கூறுகிறோம் உங்களை போல் மக்களின் வரிப்பணத்தை வீன்விரயம் செய்து கொள்ளையடிக்கவில்லை.
உங்களை போன்று நாங்கள் ஊழல்வாதிகளும் அல்லர். நாங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறோம். தோற்றுப்போன அரசியல்வாதிகள் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறார்கள். ஆகவே எமது மக்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது. அவ்வாறு நாம் ஏமாறும் போது எமது வாழ்க்கை படும் பாதாளத்திற்கு செல்லும்.
எமது சமுகத்தினருக்கான கௌரவத்தை எமது அரசாங்கம் வழங்கியுள்ளது. எமது மக்களுக்கான கௌரவத்தை இல்லாது செய்தவர்கள் இன்று தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார்கள்.
எமது அரசாங்கத்தின் ஆட்சி இதனை பாதுகாப்பது எமது முக்கிய கடப்பாடாகும்.” – எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.