இன்றும் மழை தொடரும்! 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

மலைநாட்டில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது. கடும் காற்றுடன் சீரற்ற காலநிலை தொடர்கின்றது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதேவேளை,  சீரற்ற காலநிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, காலி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles