இபோச பஸ் மோதி நபரொருவர் பலி! நுவரெலியாவில் விபத்து!!

அம்பாறையிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பி,ஏ ரோகித்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தினுள் இன்று மதியம், வீதியியை கடக்க முட்பட்ட பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தி.தர்வினேஷ்

Related Articles

Latest Articles