ஈரானில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இந்தியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்திய எல்லையூடாகச் சந்தேகத்துக்கிடமாக ஒரு விசைப்படகு பயணித்த வேளை இந்தியக் கடற்படையினர் அந்தப் படகைச் சோதனை செய்தனர். இதன்போதே 200 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சினை அண்டிய பகுதியிலேயே ஹெரோயின் சிக்கியுள்ளது.
இதை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 6 ஈரானியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.










