இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் விரைவில் ஐ.தே.க. வசமாகும்!

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மிக விரைவில் ஐக்கிய தேசியகட்சியின் வசமாகும்என அக்கட்சியின் மஸ்கெலியா பெருந்தோட்டத்துறை அமைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஓர் அங்கமாகஇயங்கிய இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,கடந்த இரண்டுவருடங்களாக தனிப்பட்ட ஒருவரால் சொந்தம் கொண்டாடப்படுகிறது.

” ஐக்கிய தேசிய கட்சியோடு இலங்கைதேசிய  தோட்டத் தொழிலாளர் சங்கம்மீண்டும் இணைந்து செயலாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.  இந்தச் சங்கத்துக்கு2016ஆம் ஆண்டு, தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒருவர், தற்போதுதான்தான் நிரந்தர பொதுச் செயலாளரென கூறுகின்றார்.

இலங்கை தேசியதோட்டத் தொழிலாளர் சங்கத்தில் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் அமரர் கே. வேலாயுதம் மறைந்தபின்னர், அவரின் இடத்திற்கு நிரந்தரபொதுச்செயலாளரை நியமிக்கும் வரைதற்காலிக பொதுச்செயலாளராக அவர்நியமிக்கப்பட்டார்.

இந்தத் தொழிற்சங்கம்தனக்குத்தான் என உரிமை கோரிவருகின்றார்.அவரை, எவரும்நிரந்தரமான பொதுச்செயலாளராக நியமிக்கவில்லை.அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மலையக மக்களின்சந்தாப்பணம் உட்பட, மலையக மக்களுக்காகஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சங்கத்தைதன் சுகபோகத்திற்காக பயன்படுத்திவருவதாகவும் ரவீந்திரன்குற்றம் சுமத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles