கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாளை ‘பட்ஜட்’ முன்வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (12) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச, பிற்பகல் 2 மணிக்கு பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் 2 ஆவது பாதீடு இதுவாகும். அதேபோல நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் கன்னி வரவு – செலவுத் திட்டமும் இதுவாகும்.
சுதந்திரத்துக்கு பிறகு இலங்கையில் இதுவரை 75 வரவு – செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாளை முன்வைக்கப்படவுள்ள பாதீடானது 76 வரவு – செலவுத்திட்டமாகும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நிதி அமைச்சு பதவியை வகித்து, பட்ஜட் தாக்கல் செய்யும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். பஸில் ராஜபக்சவுக்கு முன்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவே நிதி அமைச்சராக செயற்பட்டார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தகாலப்பகுதியில் நிதி அமைச்சும் அவர் வசமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக இதுவரை 11 வரவு – செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளார்.

நாளை பட்ஜட் உரையின்போது பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமதுரையின்போது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெளிவுப்படுத்தவுள்ளார்.

கொரோனா தொற்று நிலையென்பதால் முழுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே பட்ஜட் தொடர் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவரப்படுத்தப்பட்டுள்ளன.
12 ஆம் திகதி நிதி அமைச்சரின் உரை மட்டமே இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பாகும்.

இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். (அமைச்சுகளுக்கான நிதி ஓதுக்கீடு). டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும். ஞாயிறு மற்றும் பௌர்ணமி விடுமுறை தினங்களைத்தவிர ஏனைய நாட்களில் சபை தொடர்ச்சியாகக் கூடும்.

2008 – நிதி அமைச்சர் மஹிந்த
2009 – நிதி அமைச்சர் மஹிந்த
2010 – பதில் நிதி அமைச்சர் சரத் அமுனுகம
2011 – நிதி அமைச்சர் மஹிந்த
2012 – நிதி அமைச்சர் மஹிந்த
2013 – நிதி அமைச்சர் மஹிந்த
2014 – நிதி அமைச்சர் மஹிந்த
2015 – நிதி அமைச்சர் மஹிந்த
2016 – நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.
2017 – நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.
2018- நிதி அமைச்சர் மங்கள சமரவீர
2019 – நிதி அமைச்சர் மங்கள சமரவீர
2021- நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச.

-ஆர்.சனத்-

Related Articles

Latest Articles