கதிர்காமம் கோவிலில் நடப்பது என்ன? ரூ 5 கோடி பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயம்!

கதிர்காமம் கோவிலுக்கு வழங்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவராலேயே குறித்த மாணிக்கக்கல், கோவிலுக்கு பூஜை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, கதிர்காமம் கோவிலுக்கு பாதாள குழு உறுப்பினர் அங்காட லொக்கா தரப்பால் வழங்கப்பட்டிருந்த 38 பவுண், தங்க தகடொன்றும் அண்மையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles