குறைந்து வருகிறது எரிபொருளுக்கான வரிசைகள்-பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

எரிபொருள் வரிசைகள் முன்பைவிட தற்பொழுது குறைவடைந்து வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

போதுமான எரிபொருள் இருப்பதே அதற்கு காரணம் என அக்கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசலும், 22 நாட்களுக்கு போதுமான பெட்ரோலும் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வாகன இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் திட்டத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அகில இலங்கை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles