‘கௌரவமாக வெளியேறுங்கள்’ – சுதந்திரக்கட்சிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தார் நாமல்

” அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கௌரவமான முறையில் வெளியேறவேண்டும். ” – என்று அமைச்சல் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசில் அங்கம் வகிக்கின்றது. எனவே, அரசால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அக்கட்சியும் பொறுப்புக்கூறவேண்டும். மாறாக தமக்கு தொடர்பில்லை என நழுவிவிடமுடியாது.

அதேபோல அரசின் தீர்மானங்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பிடிக்கவில்லையெனில், அங்கும், இங்குமாக விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டு திரிவதைவிட, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்கூறிவிட்டு கௌரவமாக விடைபெறுவதே சிறந்தது.” – என்றார் நாமல்.

Related Articles

Latest Articles