ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்படும் என அறிவித்திருந்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தனது ஆதரவை மீள பெறுவது தொடர்பில் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது.
இவ்வாறு ஆதரவை மீளப்பெற்ற பின்னர் அவர் சுயாதீனமாக செயற்படுவார் எனவும் அறியமுடிகின்றது.
“ ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் என்ன நடக்கின்றது என தெரியவில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரலும் புரியவில்லை.” – என்று பிரபா கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் உதயமான மனிதநேய மக்கள் கூட்டணியிலும் பிரபா கணேசன் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.