சபை முதல்வராக சுசில் – கொறடாவாக பிரசன்ன நியமனம்!

நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.

சபை முதல்வராக செயற்பட்ட தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles