டயர் தட்டுப்பாடு – நாவலப்பிட்டிய டிப்போவில் 22 பஸ்கள் சேவையில் இல்லை

நாவலப்பிட்டி இலங்கை போக்குவரத்து சபையினால் நீண்டதூர குறுந்தூர பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் தாம் கடும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை – நாவலப்பிட்டி மார்க்கத்தில் தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை எனவும், இதன்காரணமாக  தமது அன்றாட கடமைகளுக்கு செல்லும்   பயணிகள் மற்றும் இதர தொழில்களுக்கு செல்வோர் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புற மற்றும் தோட்ட புற வீதிகளில் முறையாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் இயக்கப்படாமையால், டீசல் நெருக்கடியால் அந்த வீதிகளில் தனியார் பஸ்கள்  சரியாக இயங்காமையால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

நாவலப்பிட்டி டிப்போவில் கடும் டயர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டயர்கள் இல்லாததால் சுமார் 22 பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி டிப்போ முகாமையாளர் அனுர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பபட்டுள்ளதாகவும், அதற்கேற்ப  டயர் நெருக்கடிக்கு தீர்வு கிடைத்ததன் பின்னர் எதிர்காலத்தில் பஸ்களை முறையாக இயக்க முடியும் எனவும் பருவப் பயணச்சீட்டு (சீசன்) பெற்ற பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடை அல்லாமல் வேறு ஆடைகள் அணிந்தும் பஸ்களில் பயணிக்கும் வசதியை நாவலப்பிட்டி டிப்போ வழங்கியுள்ளதாகவும் ஜெயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles