அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கொள்கலன்களை விடுவிக்க , டொலர்களை விநியோகிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஒரு மாத காலத்துக்கு அதிகமாக இந்தக் கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
அரிசி , சீனி, கடலை, பருப்பு ,காய்ந்த மிளகாய்,கருவாடு மற்றும் கொத்தமல்லி உட்பட பல உணவுப் பொருட்கள் இந்த கன்டெய்னர்களில் இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
