“மலையகத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சி நடக்கின்றது. இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும். இது எமது இனம் சம்பந்தப்பட்ட விடயம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் ஆபத்தாக அமையும்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
“ கண்டி, உன்னஸ்கிரிய பகுதியில் அரச பெருந்தோட்ட யாக்கத்தால் கடிதமொன்று அனுப்பட்டுள்ளது. 14 நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வராவிட்டால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமாகும்.
எனவே, எமக்கான பிரதிநிதித்துவம் இருந்தால்தான் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் சூழ்ச்சியில் மக்கள் சிக்கக்கூடாது. எமது பிரதிநிதித்துவத்தை மக்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.”- எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
க.கிஷாந்தன்