தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

” நாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதேபோல பாதாளக்குழுக்களின் செயற்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்.” – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுநிலை) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மஹரகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அனைத்து பாதுகாப்பு தரப்புகளின் பங்கேற்புடன், வாரம் ஒருமுறை தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரிவாக  ஆராயப்படும்.  அந்த கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்கேற்புடன் தேசிய பாதுகாப்பு சபைக்கூட்டம் நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தேசிய பாதுகாப்பு என்பது பரந்தப்பட்ட விடயமாகும். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, பயங்கரவாத அச்சுறுத்தல், கொரோனா போன்ற பெருந்தொற்றால் மக்கள் உயிரிழப்பது, இயங்கை அனர்த்தங்கள் போன்றவற்றின்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனலாம். ஆனால் ஏதேனும் ஒரு இடத்தில் கொலை இடம்பெறுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் குறிப்பிடமுடியாது.
அத்துடன், பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொலிஸார்தான் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இந்நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். ” –
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles