நவ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திலக் வராகொட நீக்கப்படவில்லை எனவும், அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இராஜினாமா செய்துள்ளதாகவும் அக்கட்சியின் ஆலோசகர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நவ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திலக் வராகொட நீக்கப்பட்டுள்ளார் எனவும், புதிய செயலாளராக பேஷல ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகிருந்தன.
இந்நிலையிலேயே செயலாளர் பதவி நீக்கப்படவில்லை எனவும், அவர் பதவி விலகினார் எனவும் சந்திரிக்கா அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
