நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி! பதறுகிறது மொட்டு கட்சி!! பகீர் தகவலும் வெளியானது

போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அதற்காக பெருமளவு நிதி வழங்கிவருவதாகவும் அரசின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று (01) தெரிவித்தது.

எனவே, தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள், இந்த சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மக்கள் போராட்டத்தின் பின்னணியில் சூழ்ச்சித் திட்டம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார்.

” இலங்கையை தோல்வி கண்ட நாடாக (பெயில் ஸ்டேட்டட்) மாற்றுவதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நாட்டை பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இ தற்காக தற்போது பணங்களை வாரி வழங்கிவருகின்றன. போரால் அடையமுடியாத இலக்கை, வேறு வழியில் அடைய முடியும் என அந்த குழுக்கள் கருதுகின்றன. எனவே, உங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுங்கள், ஆனால் உங்களுடன் இருப்பவர்கள் யாரென்பதையும், அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்னவென்பதையும் அடையாளம் கண்டு கொள்ள விழிப்பாகவே இருக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

” எனக்கு நேற்று (31) கிடைத்த தகவலொன்றால் நான் அச்சம் அடைந்தேன். கனடாவில் உள்ள நபரொருவரே எனக்கு இந்த தகவலை வழங்கினார். சமூக வலைத்தளங்களில், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பதிவொன்றை இட்ட கையோடு, சர்வதேச அமைப்பொன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது. பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், நிதி உதவி வழங்க தயார் எனக் கூறப்பட்டுள்ளது.

இப்படி பல சூழ்ச்சிகளுக்கு மத்தியிலேயே அரசை முன்னெடுக்கின்றோம். . நாட்டு பணத்தை எவரும் கொள்ளையடிககவில்லை. அந்திய செலாவணி இருப்பை கொள்ளை அடிக்கவும் முடியாது. எனவே, போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. ” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு தீவிரவாத, பாசிசவாத முத்திரை குத்தப்படுகின்றது, மக்களை அச்சம் கொள்ள வைக்கவும், தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது என எதிரணிகள் சுட்டிக்காட்டிவரும் நிலையிலேயே, மொட்டு கட்சி செயலாளர் இப்படியொரு தகவலை வெளியிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles