ஹாலிஎல, உடுவரை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் நேற்று மாலை அடையாளம் காணப்பட்ட நிலையில், கற்பாறைகளுக்குள் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காகொல்ல, தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை 7ஆம் கட்டை, விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகிலுள்ள ஆற்றின் அணைக்கட்டு பகுதியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞனே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்ததாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
காகொல்ல பகுதியில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்திருந்த நால்வர் குறித்த பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆற்றங்கரையில் இருந்த நிலையில், ஏனைய மூவரும் நீராடிக்கொண்டிருந்தபோது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பின்னர், காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
